முகப்பு »  நலவாழ்வு »  Home Remedies For Pimples & Blackheads By Celeb Dermatologist Kiran Lohia

Home Remedies For Pimples & Blackheads By Celeb Dermatologist Kiran Lohia

சரும நிபுனர் கிரண் லோலா சேத்தி அளிக்கும் முகப்பரு நீக்குவதற்கான வீட்டு சிகிச்சைகள்

Home Remedies For Pimples & Blackheads By Celeb Dermatologist Kiran Lohia

சிறப்பம்சங்கள்

  1. செபேசியஸ் சுரப்பிகளினால் முகப்பரு ஏற்படுகிறது
  2. முகப்பரு நீக்க சில வீட்டு சிகிச்சைகள் உள்ளன
  3. உடற் பயிற்சி செய்வதற்கு முன் முகத்தில் உள்ள மேக்-அப்பை கழுவ வேண்டும்.

பெண்களின் அழகு பாதிப்புகளில் முகப்பரு பிரச்சனை முக்கியமானது. முகப்பரு ஏற்படாமல் தடுக்க சில வழிமுறைகள் உள்ளன,மேலும், முகப்பரு ஏற்பட்டிருந்தால், அவற்றை நீக்கவும் சில வீட்டு சிகிச்சைகள் உள்ளன. பருவமடையும் போது, உடலில் உள்ள செபேசியஸ் சுரப்பிகளினால் முகப்பரு ஏற்படுகிறது

அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை எடுத்து கொள்ள கூடாது. அதிக இரத்த சர்க்கரை அளவினாலும், முகப்பரு ஏற்படும் வாய்ப்புள்ளது. சரும நிபுனர் கிரண் லோலா சேத்தி அளிக்கும் முகப்பரு நீக்குவதற்கான வீட்டு சிகிச்சைகள்.

முகப்பரு நீக்க செய்ய வேண்டியவை

  1. ஆப்பிள் சிடர் வினிகர்

பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றை அழிக்க ஆப்பிள் சிடர் வினிகர் உதவுகிறது. முகப்பருவால் ஏற்பட்டுள்ள வீக்கத்தை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகரில் உள்ள சக்சினிக் அமிலம் உதவி செய்கிறது. தண்ணீருடன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து கொள்ள வேண்டும். முகத்தை கழுவிய பின்பு, கலவையை முகத்தில் தேய்க்கவும். சிறிது நேரத்திற்கு பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவவும். தினமும் இரண்டு முறை இதை செய்து வந்தால், முகப்பரு வேகமாக மறையும்.

குறிப்பு : குறைந்த அளவு ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், சரும எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு

apple cider vinegar


2. தேன் இலவங்கம் மாஸ்க்

பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கொண்ட தேன், இலவங்கம் ஆகிய பொருட்கள் முகப்பரு மறைய உதவி செய்யும். ஒரு ஸ்பூன் இலவங்க பொடியுடன், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். முகத்தை கழுவியவுடன், பேஸ்டை தேய்த்து 15 நிமிடங்கள் முகத்தில் விடவும்

honey

 

3. முகப்பரு போக்கும் பேஸ் வாஷ்

பேஸ் வாஷ்களை சரியான இடைவெளியில் மாற்றி பயன்படுத்துவதினால், முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.  லேசான பேஸ் வாஷ் காலையிலும், முகப்பரு நீக்க கூடிய பேஸ் வாஷ் மாலையிலும் பயன்படுத்தலாம்.

face wash

Photo Credit: iStock

4. டீ டரீ ஆயில்

சருமத்தில் உள்ள வீக்கத்தை குறைக்க டீ ட்ரீஆயில் பயன்படுகிறது. மேலும், பாக்டீரியா எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது.

எனினும், டீ ட்ரீ ஆயில் பயன்படுத்துவதனால், சொரி, எரிச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். மற்ற பயன்பாட்டு எண்ணெய்யுடன் டீ ட்ரீ ஆயிலை கலந்து பயன்படுத்த வேண்டும்

 

5. மேக்-அப் ரிமூவர்

உடற் பயிற்சி செய்வதற்கு முன் முகத்தில் உள்ள மேக்-அப்பை கழுவ வேண்டும். பயிற்சியின் போது ஏற்படும் வியர்வை, முகத்தில் உள்ள ஓட்டைகளில் தங்கி, முகப்பரு ஏற்பட வழிவகுக்கும்.

make up removing

 

Also read: 5 Easy Hacks You Can Try At Home To Get Rid Of Acne

(Dr. Kiran Lohia Sethi is a dermatologist at Isya aesthetics Pvt Ltd)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------