முகப்பு »  நலவாழ்வு »  அன்னையர் தினம் ஸ்பெஷல் ; "தாயின்றி அமையாது உலகு"

அன்னையர் தினம் ஸ்பெஷல் ; "தாயின்றி அமையாது உலகு"

Happy Mothers Day: நான் நலமாக இருந்தால் தான் நான் சிறந்த தாயாகவும் மனைவியாகவும், தோழியாகவும் , பெண்ணாகவும் வளம் வர முடியும். "

அன்னையர் தினம் ஸ்பெஷல் ; "தாயின்றி அமையாது உலகு"

Mothers Day 2019: இவ்வுலகில் அனைவரும் கொண்டாடும், கொண்டாடப்பட வேண்டிய பெரும் உறவு தாய். தன் வாழ்நாளில் பெரும் பகுதியை குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் செலவழிக்கும் வாழ்கை போராளி தாய். தாயை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வாழ்நாளின் பெரும் பகுதியை நமக்காக செலவழிக்கும் தாயை போற்ற இந்த ஆண்டு நாம் என்ன செய்யலாம், தாய்மார்கள் தங்களின் உலவியல் சிக்கல்களில் இருந்து எவ்வாறு வெளியேறலாம் என்று இந்தாண்டு அன்னையர் தினத்திற்கு ஆலோசனை கூறுகிறார் மனநல ஆலோசகர் வந்தனா

"அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் பல்வேறு தினங்களில் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது., இந்தியாவில் அன்னையர் தினம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்று கிழமை கொண்டாடப்படுகிறது. அன்னையின் சிறப்பை போற்றும் இந்நாளில் பிள்ளைகள் தன்னுடைய அம்மாவுக்கு பரிசுகள் வழங்கி மகிழ்வார்கள் , ஆனால் உங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த விஷயம் தன்னுடைய பிள்ளையுடன் சில வினாடிகள் கலந்துரையாடுவது. தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடமாவது என் அம்மாவுக்காக நேரம் ஒதுக்குவேன் என்று உங்கள் அம்மாவுக்கு உறுதி அளியுங்கள் , இதை விட சிறந்த பரிசு வேறெதுவும் இல்லை என்பதை உணருவீர்கள் !!

பெண்கள் அனைவருக்கும் தனித்துவம் உள்ளது, ஆனால் அவர்கள் அதை மறந்துவிட்டு அடுத்தவர்களின் மேல் தான் கவனம் செலுத்துவார்கள். குழந்தைகளை அன்புடன் அக்கரை செலுத்தி வளர்ப்பது பெண்களின் சிறப்பம்சம். உங்களது உடம்பு நீங்கள் வசிக்கும் வீடு, அது வலுவாக இருந்தால்தான் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். பெண்களின் ஹார்மோன்களால் வயதுக்கு ஏற்றாற்போல் உடல்நிலையிலும் மன நிலையிலும் மாறுதல்கள் வரும். 35 வயது கடந்துவிட்டால் Mammogram ( மார்பக பரிசோதனை ) , Pap smear ( கர்ப்பப்பை வாய் பரிசோதனை ) மற்றும் வருடத்திர்க்கு ஒரு முறை Master Health check up செய்து கொள்வது முக்கியம்.


குழந்தை பிறந்தவுடன் தன்னை தானே மறந்துவிடுகிறாள். தந்தையை விட தாயிடம் தான் குழந்தைக்கு அதிகமான உணர்ச்சி பிணைப்பு இருக்கும் . உங்கள் குழந்தை உங்களுக்கு விலை மதிப்பில்லாத பொக்கிஷம் தான் , ஆனால் நீங்களும் மதிப்பு மிக்க பொக்கிஷம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். .

எனக்கான நேரம் ;

நான், எனக்கு, என்னுடையது, என்ற வார்த்தையை ஒரு தாய் எப்பொழுதும் பயன் படுத்த மாட்டாள். நான் என்ற சொல் சுயநலமாக தோன்றலாம் , ஆனால் உண்மை என்னவென்றால் , அனைவருக்கும் இது உதவிகரமாக இருக்கும். இது உங்களுக்கான கூடுதலான நேரம் கிடையாது, ஆனால் இது உங்களுக்கான சில மணி நேரம் மட்டுமே. ஒரு பெண் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருந்தால் தான் சிறந்த தாயாகவும், மனைவியாகவும் தன்னை மெருகேற்ற முடியும். தினமும் உங்களுக்காக சில மணி நேரம் செலவிடும் பொழுது புத்துணர்ச்சியாக உணர்வீர்கள் மற்றும் தங்கள் முன்னால் வரும் அனைத்து இன்னல்களையும் சந்திக்க தயாராக இருப்பீர்கள்.

சுய மதிப்பு அளிக்கும் வார்த்தைகளை உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள் , உதாரணத்திற்கு ,

" நான் இன்றைக்கு எனக்காக சில மணி நேரம் செலவிட அனுமதிக்கிறேன், மற்றும் இதற்காக நான் குற்ற உணர்ச்சி அடைய மாட்டேன்., நான் நலமாக இருந்தால் தான் நான் சிறந்த தாயாகவும் மனைவியாகவும், தோழியாகவும் , பெண்ணாகவும் வளம் வர முடியும். "

தனக்கான நேரம் என்பது மளிகை சாமான் வாங்குவது கிடையாது, இவையெல்லாம் கண்டிப்பாக என்ன வந்தாலும் செய்ய வேண்டிய காரியங்களே . உங்களுக்கான நேரம் என்றால் , உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்வது, மகிழ்ச்சியான பொழுதுபோக்கில் ஈடுபடுவதாகும்.
உங்களுக்கு பிடித்தமான window shopping , புத்தகம் படிப்பது, வரைவது, கோலம் போடுவது, பாடுவது, நடனம் ஆடுவது , நண்பர்களுடன் உரையாடுவது, இன்னும் பல,. உங்கள் தனி திறைமையை வெளிப்படுத்துங்கள, உங்கள் மனம் பட்டாம்பூச்சி போல சிறகடிக்கும்.சிறிது நேரம் இயற்கை காற்றை சுவாசித்து நடந்து பாருங்கள், உங்களுக்குள் பல வித அற்புதங்கள் நிகழும்.

தாய்மார்களுக்கு மிக அதிக உள்ளுணர்வு (intuition) இருக்கும் என்பதை மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நம்புகிறார்கள். சமீபத்திய online கணக்கின்படி 92% தாய்மார்கள் தங்கள் உள்ளுணர்வு கேற்ற படி சூழ்நிலைகள் நடந்திருக்கிறது என்று அறிவித்திருக்கிறார்கள்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

சரோஜாவுக்கு 2 ஆண் குழந்தைகள், இரண்டாவது குழந்தை துரு துருவென்று இருப்பான் ஆனால் இரண்டு வயது ஆனா பின்பும் பேச்சு சரியாக வரவில்லை, சைகையிலேயே தன் தேவைகளை தெரிவிப்பான். அவளுடைய கணவனும், குடும்பத்தார்களும் போக போக பேச்சு வந்துவிடும் என்று சொன்னார்கள். சரோஜாவுக்கு ஏதோ சரி இல்லை என்று உள்ளுணர்வு சொல்லியது, தன் கணவனை நச்சரித்து தன் குழந்தையை மருத்துவரிடம் ( paediatrician ) காண்பித்தாள். சில மருத்துவ சோதனைகள் எடுத்த பின்பு தான் தெரிந்தது குழந்தைக்கு இடது பக்க காது சரியாக கேட்கவில்லை என்று. மருத்துவரிடம் சிகிச்சை எடுத்த பின்பு குழந்தை பேச ஆரம்பித்தான்.

தாய்மையின் அனுபவத்தால் , ஒரு தாய் சிறந்த மனித தன்மையுடன் திகழ்கிறாள். ஒரு தாய் எந்த வித சந்தர்ப்பத்திலும் தன் குழந்தையுடன் பிணைப்புடனும், பொறுப்புடனும் நடந்து கொள்வாள். அதீதமான அன்பின் காரணத்தினால் தன் குழந்தையுடனான உறவில் தாயின் ஆறாவது அறிவு எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும்.
தினமும் அன்னையர் தினம் தான் என்பதை உணர்ந்து அன்னையை போற்றுவோம் !!" என்றார்....

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------