முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடையை குறைக்க உதவும் பால்

உடல் எடையை குறைக்க உதவும் பால்

உடல் எடை குறைக்க பால் உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

உடல் எடையை குறைக்க உதவும் பால்

வைட்ட்மின் டி சத்து அதிகம் நிறைந்த பால், எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன

சிறப்பம்சங்கள்

  1. Milk is an excellent source of protein
  2. Proteins take much longer to process and to digest
  3. Certain acids found in milk can speed up the fat-burning process

 
இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் பெரும்பாலானோர் பால் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரோக்கியமான ஒன்றாக பால் உள்ளது. வைட்டமின், தாதுக்கள் , புரதச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளது. ஒரு கிளாஸ் பாலில், எலும்பு வலிமைக்கான சத்துக்களும், தோல்,முடி, உடல் ஆரோக்கியத்திற்கான சத்துக்களும் உள்ளது. மேலும், உடல் எடை குறைக்க பால் உதவும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்க பால் உதவுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும் பால்

1. பாலில் உள்ள புரதச்சத்துகள் உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவுகின்றன. உடல் எடையை குறைக்க எடுத்து கொள்ளும் உணவுகளின் பட்டியலில், தினம் இரண்டு கிளாஸ் பால் குடிக்க வேண்டியது அவசியம் என அறிவுறுத்தப்படுகிறது. பாலில் உள்ள மாக்ரோ சத்துக்கள் பசி கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

2. வைட்ட்மின் டி சத்து அதிகம் நிறைந்த பால், எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. அதுமட்டுமின்றி, கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் உடலிலுள்ள கலோரிகளை எரிக்க பயன்படுகிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3. உடல் எடையை குறைத்த பின்னர், ஆரோக்கியமான பி.எம்.ஐ எனப்படும் உடல் குறியீட்டு எண் சரியான அளவு வைத்திருக்க வேண்டும். இதனால், உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கப்பெறுகின்றன. ஆரோக்கியமான உடல் எடை குறைப்பு பயிற்சிக்கு பால் குடிக்க வேண்டும். 

 

milk
 

4. உடலில் உள்ள புரதச்சத்து, கரைவதற்கு தாமதம் ஆகும், அதனால் அடிக்கடி பசி ஏற்படவும், ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடவும் வாய்ப்பளிக்காது.
பாலில் உள்ள குறிப்பிட்ட அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைக்க உதவுகின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
 

milk

5. புரதச்சத்து அதிகம் நிறைந்த பால், உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றாகும். மாட்டுப்பால், ஆட்டுப்பால், எருமை பால் ஆகியவை ஊட்டச்சத்து அதிகம் நிறைந்தது. மேலும், ஓட்ஸ், மில்க் ஷேக்ஸ் ஆகியவற்றை தயாரித்து உண்ணலாம். கொழுப்புகள் அற்ற பால் விற்கப்படுகிறது. எனினும், சர்க்கரை சேர்த்து சுவையூட்டப்பட்ட பால் தவிர்ப்பது நல்லது. அவை உடல் எடை குறைப்பிற்கு உதவாது.
 

milk

அனைவரின் உடலும் பாலை ஏற்றுக் கொள்ளாது. சிலருக்கு, பால் பொருட்கள் அலர்ஜியை உண்டாக்கும். புரதச்சத்து தேவைப்படும் சைவ பிரியர்களுக்கு பால் சிறந்த ஊட்டச்சத்து பானமாக அமையும். ஆனால், பால் விரும்பாதவர்கள் மாற்று வழியில் புரதச்சத்தை எடுத்து கொள்ள வேண்டியது அவசியமாகும். காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------