முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடையை குறைக்க புரதத்தில் அளவை அதிகரிக்கவும்

உடல் எடையை குறைக்க புரதத்தில் அளவை அதிகரிக்கவும்

புரதத்தை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும்போது உடல் எடை விரைவில் குறைய வாய்ப்பு உண்டு

உடல் எடையை குறைக்க புரதத்தில் அளவை அதிகரிக்கவும்

உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் புரதம் மிகவும் முக்கியமானது. அதேபோல உடல் எடை குறைப்பதற்கும் புரதம் நிச்சயம் தேவை. தினமும் சரியான அளவில் புரதத்தை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதத்தை அதிகளவு உணவில் சேர்த்து கொள்ளும்போது உடல் எடை விரைவில் குறைய வாய்ப்பு உண்டு.

உடல் எடை குறைய

தினசரி 25 முதல் 30 சதவிகிதம் வரை புரதம் உட்கொள்பவர்களுக்கு உடலில் கொழுப்பு குறையும் வாய்ப்பு அதிகம். உடலில் உள்ள அதிகபடியான கலோரிகளை எரிக்கும் தன்மையும் புரதத்திற்கு உண்டு. உடல் பருமனான பெண்கள் உணவில் அதிகம் புரதம் மற்றும் பால் பொருட்களை சேர்த்து கொள்ளும்போது உடல் எடை மற்றும் கலோரிகள் விரைவில் குறைந்துவிடும். கலோரிகள் அதிகமுள்ள புரதத்தை உட்கொண்டாலும் உடல் எடை அதிகரிக்கும்.


உடலுக்கு எவ்வளவு புரதம் தேவை ?

உடற்பயிற்சி செய்யும்போது நிச்சயம் உடல் எடை குறையும். உடற்பயிற்சியில் தினசரி ஈடுபடுபவர்களுக்கு புரதம் மிகவும் முக்கியமான ஒன்று. நாள் ஒன்றுக்கு 0.8 முதல் 1 கிராம் அளவு புரதம் தேவைப்படுகிறது. அதிகபடியாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 1.2 முதல் 1.7 வரை புரதம் தேவைப்படுகிறது.

v29kiv0g

புரதம் நிறைந்த சில உணவுகள்

 • முட்டை
 • நட்ஸ்
 • கோழி
 • பால் பொருட்கள்
 • சோயா
 • கடல் உணவுகள்
 • நட் பட்டர்ஸ்
 • பீன்ஸ்
 • மீன்
 • சூரியகாந்தி விதை
 • சார்டினஸ்
 • பருப்பு வகைகள்
 • ஓட்ஸ்
 • கீரை
 • பூசணி விதை

இவை அனைத்தையும் சரியான விகிதத்தில் தினசரி உணவில் சேர்த்து கொண்டால் உடலுக்கு தேவையான புரத சத்து கிடைத்து விடுகிறது. இவற்றில் புரதம் மட்டுமின்றி கால்சியம், நியாசின், தையாமின் மற்றும் இரும்பு சத்துக்களும் நிறைந்துள்ளது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------