முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியம் குறித்து 2018ல் அதிகம் தேடப்பட்டவை!

ஆரோக்கியம் குறித்து 2018ல் அதிகம் தேடப்பட்டவை!

2018 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் குறித்து அதிகம் தேடப்பட்டது என்னவென்று பார்ப்போம்.

ஆரோக்கியம் குறித்து 2018ல் அதிகம் தேடப்பட்டவை!

ஆரோக்கியம் குறித்து எல்லோருக்கும் அக்கறை அதிகம் உண்டு. அப்படி ஒவ்வொரு நாளும் நம் உடல் மற்றும் ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை தொடர்ச்சியாக நாம் கூகுளில் தேடிக் கொண்டே தான் இருக்கிறோம். ஏனென்றால் நம் வாழ்வியல் முறை மற்றும் சுற்றுச்சூழல் அதிகளவில் மாறிவிட்டதென்பதால் உடல் ஆரோக்கியம் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியம் குறித்து அதிகம் தேடப்பட்டது என்னவென்று பார்ப்போம்.

1. கீட்டோ டயட்

மிக குறைவான கார்போஹைட்ரேட், அதிகபடியான கொழுப்பு மற்றும் புரதம் ஆகியவை நிறைந்திருக்கும். இவை உடல் பருமனை குறைக்க உதவும். கல்லீரல் கொழுப்பை கீடோஸாக மாற்றிவிடும். அது மேலும் க்ளூக்கோஸாக மாறி உடலுக்கு ஆற்றலை கொடுக்கும்.


2. ஏஎல்எஸ் நோய்

Amyotrophic Lateral Sclerosis (ALS) நோய் என்பது நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடியது. நடத்தல், பேசுதல் மற்றும் சாப்பிடுதல் போன்றவற்றில் தசைகளின் செயல்திறனை பாதிக்கக்கூடியது. நம் அன்றாட செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் இந்த நோய் இருக்கும்.

3. எண்டோமெட்ரியோசிஸ்

உறுப்பின் அளவை தாண்டிய தசை வளர்ச்சி அடைவதை தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று சொல்லப்படும். இவை முக்கியமாக குழந்தை பேற்றை பாதிக்கும்.

4. கஞ்சாவின் வீரியம் எவ்வளவு காலம் சிறுநீரில் இருக்கும்?

கஞ்சாவை புகைப்பதால் உடல் மற்றும் மூளை செயல்பாடுகள் ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து மாறுபடும். நீங்கள் எவ்வளவு அளவு எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொருத்து, அதன் வீரியம் முப்பது நாட்கள் வரை சிறுநீரில் இருக்கும். தினமும் புகைப்பவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை அந்த நச்சு இருக்கும்.

5. காய்ச்சல் எத்தனை நாட்கள் வரை இருக்கும்?

பொதுவாக ஒருவரின் உடல் ஆரோக்கியம், நோயின் தீவிரம், நோய் கண்டறிய பட்ட நாள் என காய்ச்சல் ஒரு வாரம் முதல் இரண்டு வாரம் வரை நீடிக்கும். 2017 ஆம் ஆண்டு காய்ச்சலால் பல உயிர் இழப்புகள் ஏற்பட்டிருப்பதால், அதிகமாக தேடப்பட்டவையாக இருக்கிறது.

1uof09kg

 

6. காய்ச்சல் நோய் தொற்று எப்படி இருக்கும்?

உடலில் காய்ச்சலுக்கான நோய் கிருமி உள்ளே நுழைந்தால் இரண்டு நாட்களில் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்துவிடும். பின் 3-4 நாட்களுக்கு நோயின் தீவிரம் அதிகரிக்கும்.

7. கற்பத்திற்கு முன் இரத்த கசிவு ஏன் ஏற்படுகிறது?

கற்பத்திற்கு முன் 10-14 நாட்களில் இரத்தக் கசிவு ஏற்படுவது வழக்கம் தான். கற்பம் தரித்தபின் வெளிர் நிறத்தில் இரத்த கசிவு ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி விடுவது நல்லது.

8. எப்போதும் சோர்வாக இருப்பது ஏன்?

ஒழுங்கற்ற தூக்கம், தவறான உணவு பழக்கம், வைட்டமின் குறைபாடு, உடற்பயிற்சியின்மை, தவறான வாழ்வியல் முறை ஆகியவை உங்களை நாள் முழுக்க சோர்வாகவே வைத்திருக்கும்.

9. நெஞ்செரிச்சல் எப்படி இருக்கும்?

வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலமானது மீண்டும் ஈசோபேகஸ்க்கு செல்வதனால் நெஞ்சு பகுதியில் எரிச்சல் ஏற்படும். இந்த அமிலமானது மீண்டும் கழுத்து மற்றும் தொண்டை பகுதிக்கு செல்வதனால் வாயில் கசப்பு சுவை இருக்கும். நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

10. உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்ன?

உயர் இரத்த அழுத்தமானது இருதய நோய்க்கு வழிவகுக்கும். உடல் பருமனானவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் நிச்சயம் இருக்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு எவ்விதமான அறிகுறிகளும் இல்லாததால் கவனமாக இருக்க வேண்டும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். உணவில் சோடியத்தை குறைவாக எடுத்து கொள்ளவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------