முகப்பு »  நலவாழ்வு »  கொரோனா வைரஸ்: சுயத் தனிமைப்படுதலின் போது டெலிகன்சல்ட்டிங் எப்படி உதவுகிறது!

கொரோனா வைரஸ்: சுயத் தனிமைப்படுதலின் போது டெலிகன்சல்ட்டிங் எப்படி உதவுகிறது!

பதற்றம் பரவுதலைத் தடுப்பதிலும் மற்றும் தரமான பராமரிப்பை அதிகம் அணுகத்தக்கதாக மாற்றுவதிலும் பொது-தனியார் கூட்டாண்மை முக்கியப் பங்கினை வகிக்கும்.

கொரோனா வைரஸ்: சுயத் தனிமைப்படுதலின் போது டெலிகன்சல்ட்டிங் எப்படி உதவுகிறது!

கொரானாவைரஸ் பரவல், சீனாவை ரிமோட் பணி, கல்வி மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பிற்கான சோதனை தளமாக மாற்றியுள்ளார். பல மில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான நகரங்கள் பாதிக்கப்பட்டு, பெரிய அளவிலான நகரங்கள் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில், சாத்தியமுள்ள பரவுதல் காரணிகளை அடையாளம் காண மற்றும் அகற்ற, தொழில்நுட்பம் அதிகப்படியாகப் பயன்படுத்தப்படுகின்றன. சீனாவிலுள்ள ஸ்டார்ட்அப்கள் மற்றும் நிறுவனங்கள், உணவு, மளிளை மற்றும் பார்சல் வழங்குதல் சேவைகளில், வாடிக்கையாளர்கள் மற்றும் ரைடர்கள் சந்திக்காமல் மேற்கொள்ளப்படும் வகையில் அவர்களது ஆப்களை அப்டேட் செய்து வருகின்றனர்; மருத்துவமனைகள் கான்டாக்ட்லெஸ் லாக்கர்களை இன்ஸ்டால் செய்துவருகின்றன, எனவே, மருத்துவப் பணியாளர்களால் QR குறியீடுகளின் உதவியுடன் உணவை அன்லாக் செய்துகொள்ள முடியும். குழந்தைகள் லைவ் ஸ்ட்ரீமிங்கின் வழியாக வீட்டிலேயே பாடம் படிக்கின்றனர், பணியாளர்கள் மெய் நிகர் சந்திப்புக் கருவிகளைப் பயன்படுத்துவது, கடந்த பதினைந்து நாட்களில் பல மில்லியன் கார்ப்பரேட் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனர்கள், ஆன்லைனில் மருத்துவர்களைக் கலந்தாலோசிப்பதையும், தங்களது அறிகுறிகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதையும் மற்றும் சாத்தியமுள்ள தொற்று குறித்த கவலைகளைப் போக்குவதற்கும் மருத்துவர்களை ஆன்லைனில் கலந்தாலோசிப்பதை வசதியாகக் கருதுகின்றனர். சென்டர்ஸ் ஃபார் டிசீஸ் கண்ட்ரோல் அண்டு பிரிவென்ஷன் போன்ற யுஎஸ் முகமைகள், கிளீனிக்குகளுக்கு வருகை தருவதற்கு முன்பாக, மக்கள் மருத்துவரை வீடியோ, சாட் அல்லது ஃபோன் வழியாகத் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கின்றன. 

இந்தியாவில், இத்தகைய ரிமோட் ஹெல்த்கேர் மீதான அறிவுறுத்தல் ஏன் மிகவும் பொருத்தமானது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்:


இந்தியாவின் மருத்துவர்கள் நோயாளிகள் விகிதம் 1:1700 ஆகும். wHO – ன் பரிந்துரை, 1:1000. தோராயமான 1,000 நபர்களுக்கு 1.1 படுக்கைகள் உள்ளன. உலகளாவிய சராசரி 2.7 ஆகும். நமது நாடு சிறந்த மருத்துவ நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள போதிலும், பரப்பளவு மற்றும் மக்கள் தொகை ஆகியவற்றின் அடிப்படையில், உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. நாட்டின் ஒரு சதுர கிலோமீட்டரில் உள்ள மக்கள்தொகை அடர்த்தியானது 420 ஆகும். சீனாவில் இது வெறும் 148 ஆகும். பொது மருத்துவமனைகள் எப்போதும் அதிக ஜனநெருக்கடி கொண்டதாகவும், தனியார் மருத்துவமனைகள் பலரால் அணுகமுடியாததாகவும் திகழ்கின்றன. 69% இந்திய மக்கள் வசிக்கும் ஆறு லட்சம் கிராமங்களில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை, நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகையில் வெறும் நான்கில் ஒரு பகுதியே. தோராயமாகத் தினமும் 12% நோயாளிகளுக்கு, முதல்நிலை ஆரோக்கியப் பராமரிப்பிற்கான அணுகு வசதி கிடைக்காமலேயே போகிறது. 

முதல்நிலை தற்காப்பிற்கு டெலிகன்சல்ட் 

அதிகபட்ச கவரேஜ் (மருத்துவ உதவி) மற்றும் குறைந்தபட்ச கிருமிகள், பேக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவலை, கிளீனிக்குகள், காத்திருப்பு அறைகள், நுசுகளில் சாத்தியமாக்க, மெய் நிகர் வருகைகளைப் பயன்படுத்துவது மிகச்சிறந்த வழியாகும். மேலும், மெய்நிகர் ஆரோக்கியப் பராமரிப்பு அல்லது டெலிகன்சல்ட், பாதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்கும் அதே நேரத்தில், ஒருவரது வீட்டிலேயே இருந்துகொண்டு, கட்டுப்படியாகும் வகையில் பராமரிப்பினைப் பெறுவதையும் சாத்தியமாக்குகிறது. ஒருவர் நோயைப் பரப்பும் நிலையிலிருந்தால், அது, அந்த நபர் கிளீனிக்குகளில் உள்ள பிறருக்குத் தொற்றினை உண்டாக்குவதையும் மற்றும் கொரானாவைரஸ் போன்ற தொற்றுகளை ஆரோக்கியப் பராமரிப்பு பணியாளர்களுக்குப் பரப்புவதையும் இது தடுக்கும். இதை ஒரு கண்காணிப்பு முறையாக திறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தலாம். இதனால், தீவிரமான நேர்வுகளில் மாத்திரம், சோதனைகள், உடல்நல பரிசோதனைகள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படலாம். 

ஆலோசனைகளைப் பெற டெலிகன்சல்டை பயன்படுத்தவும் மற்றும் சுய-மருத்துவ இடர்பாடுகளை போக்கவும்

வயதுவந்தோர் மற்றும் குழந்தைகள் உட்பட, ஆயிரக்கணக்கானோர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றும் பல மில்லியன் மக்கள், தொற்று அச்சத்தால் மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகளிலிருந்து தள்ளியிருக்கும் நிலையில், ஒரு GP அல்லது பிற நிபுணர்களை, ஒருவரது வீட்டிலிருந்தபடியே சொகுசாக கன்சல்ட் செய்வதற்கான ஒரு சிறந்த தேர்வாக டெலிகன்சஸ்ட் திகழ்கிறது. அதே போல் மருத்துவர்களாலும், நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கைகள் குறித்தும் மற்றும் தொற்றுப் பரவல் குறித்தும் வழிகாட்ட முடியும்.

இந்தப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு துரிதமான செயல்முறை பொது-தனியார் கூட்டாண்மையாகும்

தொழில்நுட்பத்துடன் மானுட நிபுணத்துவத்தையும் இணைப்பது, நாட்டின் கொரோனா வைரஸிற்கு எதிரான போருக்கு மிகவும் உதவிக்கரமாக இருக்கும். பிராக்டோ போன்ற அடித்தளங்கள், தொலை மருத்துவ சேவைகளை வழங்குவது, இன்னும் அதிக மருத்துவர்கள் நோயாளிகளை ஆன்லைனில் அணுகுவதை ஏதுவாக்குகிறது மற்றும் அவர்கள் நோயாளி உயர் இடர்பாட்டில் இருப்பதைக் கண்டறிந்தால், கீழ்க்காணும் படிநிலைகளில் ஒன்றைப் பரிந்துரைப்பர்: 1) மருத்துவரை நேரிடையாகச் சந்தித்தல் மற்றும் மருத்துவருக்கு அது குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவித்தல், 2) சோதனைகளை ரிமோட் ரீதியில் மேற்கொள்வதைச் சாத்தியமாக்கும் வகையில் சம்பந்தப்பட்ட மாநில ஆரோக்கியத் துறைகளைத் தொடர்பு கொள்ளுதல், 3) சுய-பராமரிப்பு மற்றும் சுய-தனிமைப்படுத்தல் ஆலோசனைகளை வழங்குதல். 

அரசு மருத்துவர்களை இத்தகைய அடித்தளங்களின் கீழ் கொண்டுவருவது ஒரு இருதரப்பு வெற்றியைச் சாத்தியமாக்கும். இதனால், அவர்களால் மெய் நிகர் வருகையை மேற்கொள்ள முடியும் மற்றும் சாத்தியமிருப்பின் வீட்டிலேயே மேற்கொள்ளத்தக்கச் சோதனைகள் உட்பட, அடுத்த படிநிலைகளைப் பரிந்துரைக்க முடியும். 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

டெலிகன்சல்ட்டால் நிச்சயம் முழு சிகிச்சையையும் வழங்க முடியாது என்றாலும், நோயாளிகளைக் கண்காணிப்பது, ஆரோக்கியப் பராமரிப்பு பணியாளர்களைப் பாதுகாப்பது மற்றும் தொற்றின் பரவலைக் குறைக்கும் வகையில், தொற்று ஏற்பட்ட தனிநபர்களின் பிற நபர்கள் உடனான தொடர்பைக் கட்டுப்படுத்துவது மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுடன் பின் தொடர்ச்சி பராமரிப்பினை மேற்கொள்வது ஆகியவற்றை மேற்கொள்வதன் வழியாக, நிச்சயம் ஒரு நேர்மறை மாற்றத்தை உண்டாக்க முடியும்.

எழுதியவர், டாக்டர்.அலெக்ஸாண்டர் குருவில்லா, தலைமை ஆரோக்கியப் பராமரிப்பு செயல்திட்ட அலுவலர், பிராக்டோ

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------