முகப்பு »  நலவாழ்வு »  செல்லப்பிராணிகளால் கொரொனா பரவுமா., சீன பார்சல்களை வாங்கக்கூடாதா..? வதந்திகளை நம்பாதீங்க, மருத்துவ நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..!

செல்லப்பிராணிகளால் கொரொனா பரவுமா., சீன பார்சல்களை வாங்கக்கூடாதா..? வதந்திகளை நம்பாதீங்க, மருத்துவ நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..!

செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்கள் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் இதனால் மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவ முடியாது என்றும் WHO தெரிவித்துள்ளது.

செல்லப்பிராணிகளால் கொரொனா பரவுமா., சீன பார்சல்களை வாங்கக்கூடாதா..? வதந்திகளை நம்பாதீங்க, மருத்துவ நிபுணர்கள் சொல்வதை கேளுங்கள்..!

கொரோனா வைரஸ் பரவலால் ஒவ்வொரு நாளும் புதிய வழக்குகள் பதிவாகி வருவதால் மக்களிடையே பீதியை அதிகரியுள்ளது. இந்த COVID-19 நோயை கட்டுப்படுத்தப்பட்ட முடியும் ஆனால் மருத்துவத்தில் இன்னும் தெளிவான சிகிச்சை இல்லை என்பது அச்சத்தை அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ஜலதோஷத்தின் அறிகுறிகள் ஒன்று போல இருப்பதால், இரண்டையும் வேறுபடுத்துவது மிகவும் கடினம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒரு நிபுணரை அனுகி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளவும் அல்லது தேவைப்பட்டால் ஒரு பரிசோதனையை எடுக்கும்படி மருத்துவரிடம் மக்கள் ஆலோசிக்க வேண்டியது அவசியம்; சோதனை மூலம் மட்டுமே கொரோனா வைரஸைக் கொண்டிருப்பதற்கான ஒரே உண்மையான உறுதிப்படுத்த முடியும்.

Practo-வில் கடந்த இரண்டு வாரங்களில் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி மற்றும் உடல் வலி தொடர்பான கேள்விகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. ஒரு அறிகுறி அல்லது ஒரு நோய்க்கு தகுதியான மருத்துவ கவனிப்பை வழங்குவதோடு, ஆன்லைன் ஆலோசனைகள் தற்காப்புக்கான முதல்கட்ட செயல்பாடாகவும், மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் சுய மருந்துகள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உதவும். இந்த தொற்று வைரஸைப் பிடிக்கும் என்ற அச்சத்தின் மத்தியில் பொதுமக்களை எளிதாக்கும் பொருட்டு, சீனா முன்பை விட வேகமாக ஆன்லைன் ஆலோசனைகளுக்கு திரும்புவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

தொழில்முறை மருத்துவ உதவியைத் தவிர, மக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் இருமல் அல்லது தும்மும்போது ஒருவரின் வாய் மற்றும் மூக்கை ஒரு திசு அல்லது கைக்குட்டையால் மூடுவது, தவறாமல் கைகளை கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது, பொது இடங்களில் ஒருவர் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்துதல் போன்ற நிலையான சுகாதார வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நீங்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரிடம் தொர்புகொண்டாலோ முகமூடி அணிவது முக்கியம்.


இந்த் இக்கட்டான சூழ்நிலயில் மேலும், இந்த கொடிய வைரஸ் குறித்த தேவையற்ற வதந்திகள் மற்றும் கட்டுக்கதைகள் பரப்பப்படவருகிறது. அப்படிப்பட்ட சில வதந்திகள் மற்றும் பொய்களைப் பற்றி கீழே பார்க்கலாம். இந்த தகல்களை நமக்கு தந்தவர் Dr. Alexander Kuruvilla, Chief Health Care Strategy Officer, PRACTO

கட்டுக்கதை 1 : கை உலர்த்திகள் கொரோனா வைரஸைக் கொல்லும்..?

கை உலர்த்திகள் (Hand dryers) கொரோனா வைரஸைக் கொன்றதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் தொடர்ந்து கழுவ வேண்டியது அவசியம். உங்கள் கைகளை கழுவியவுடன் அவற்றை சுத்தமான டிஷு அல்லது கை துண்டுடன் நன்கு உலர வைக்கவும்.

tltcqbl8

கட்டுக்கதை 2 : சீனாவிலிருந்து எந்த பேக்கேஜையும் பொட்டலங்களையும் பெற வேண்டாம்..?

சீனாவிலிருந்து வரும் பார்சல்களை பெறுவது முற்றிலும் பாதுகாப்பானதே. கொரோனா வைரஸ் கடிதங்கள் மற்றும் பார்சல்கள் போன்ற பொருட்களில் நீண்ட காலம் வாழாது. இதன் மூலம் தொற்றுநோய் ஆபத்து இல்லை.

s2gkbong

கட்டுக்கதை 3 : செல்லப்பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் வீட்டிற்குள் பரவலாம்..?

செல்லப்பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்கள் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்றும் இதனால் மனிதர்களுக்கு நோய்த்தொற்று பரவ முடியாது என்றும் WHO தெரிவித்துள்ளது. எப்போதும்போல பொதுவான தொற்றுநோய்களிலிருந்து விலகி இருக்க, செல்லப்பிராணிகளைக் கையாண்ட உடனேயே கைகளைக் கழுவ வேண்டியது அவசியம்.

kvo9qt4g

கட்டுக்கதை 4 : DIY முகமூடிகளால் உங்கள் முகத்தை மூடுவது கொரோனா வைரஸிலிருந்து நன்கு பாதுகாக்கிறது..?

மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், பழைய தலைக்கவசங்கள் அல்லது காகிதத்தால் செய்யப்பட்ட DIY முகமூடிகள் உண்மையில் வேலை செய்யும் தடுப்பு முறைகள் அல்ல. மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க உங்களுக்கு சளி அல்லது இருமல் இருந்தால் N95 முகமூடி அல்லது ஒற்றை பயன்பாட்டு முகமூடியை அணியுங்கள்.

rtoj7dd

கட்டுக்கதை 5 : பூண்டு சாப்பிடுவதால் புதிய கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது..?

இல்லை .. பூண்டு சளி, இருமலுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும், மேலும் ஆஸ்துமா அறிகுறிகளை எளிதாக்க உதவுகிறது. அதனால், பூண்டு சாப்பிடுவதால் புதிய கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

a0619o68

கட்டுக்கதை 6 : நிமோனியாவுக்கு எதிரான புதிய தடுப்பூசிகள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்..?

நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் புதிய கொரோனா வைரஸுக்கு எதிராக நமக்கு பாதுகாப்பை வழங்காது. கொரோனா வைரஸுக்கு ஒரு புதிய தனி தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

இது போன்ற பொய்யான, அதிகாரப்புர்வமற்ற தகவல்களை உண்மை என நம்ப வேண்டாம் என மருத்துவ நிபுணர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------