முகப்பு »  நலவாழ்வு »  வயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்!

வயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்!

நீங்கள் மலச்சிக்கலுடன் போராடுகிறீர்களானால், நீங்கள் அடிக்கடி வீங்கியிருப்பதை உணர வாய்ப்புள்ளது. போதுமான தண்ணீர் குடிக்கவும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும்.

வயிறு வீக்கத்தைக் குறைக்க 4 விரைவான வழிகள்!

வீக்கத்தைத் தடுக்க மெதுவாக சாப்பிடுங்கள், உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள்.

சிறப்பம்சங்கள்

  1. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உங்கள் உணவில் புரோபயாடிஸ் சேர்க்கவும்
  2. மேம்பட்ட குடல் ஆரோக்கியம் செரிமானத்தை மேம்படுத்தும்
  3. வீக்கத்தைத் தடுக்க அதிகப்படியான உணவைத் தவிர்க்கவும்

வீக்கம் (Bloating) என்பது உங்கள் வயிற்றில் நீங்கள் உணரும் முழுமையின் உணர்வைக் குறிக்கிறது. மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான அசீரண பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். உணவைச் சரியாக மெல்லாமல் இருப்பது, மிக விரைவாகச் சாப்பிடுவது மற்றும் அதிகப்படியான உணவு உட்கொள்வது ஆகியவை வீக்கத்திற்கு மிகவும் பொதுவான காரணங்கள். . சமீபத்திய ஐஜிடிவியில், ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் 70 முதல் 80% பெண்கள் வீக்கத்தை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதைப் பற்றி பேசுகிறார். இந்த நிலை அதிகப்படியான வாயு உற்பத்தி அல்லது செரிமான அமைப்பில் தசைகளின் இயக்கத்தில் ஏற்படும் இடையூறு காரணமாக ஏற்படுகிறது. தனது வீடியோவில், வீக்கத்தைத் தடுக்க உதவும் சில விரைவான உதவிக்குறிப்புகளை அகர்வால் பரிந்துரைக்கிறார்.

வீக்கத்தை விரைவாகக் குறைக்க உதவிக்குறிப்புகள்:

1. அதிகம் சாப்பிடாதீர்கள்


உணவுக்கு இடையில் நீண்ட இடைவெளிகள் இருப்பதால் ஒருவர் அதிகமாகச் சாப்பிடுவார். அதிகப்படியான உணவைத் தவிர்ப்பதற்கான ஒரு சிறந்த வழி, அடிக்கடி சாப்பிடுவது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிடலாம். இது உங்கள் பகுதியின் அளவைக் கணிசமாகக் குறைக்கும் மற்றும் வீக்கம் மற்றும் அசிடிட்டியைக் தடுக்கும்.

2. பொறுமையாக மற்றும் மென்று உணவைச் சாப்பிட வேண்டும்

இந்த இரண்டு பழக்கங்களும் ஒன்றாகச் சேர்ந்து உணவை நன்றாகச் சீரணிக்க உதவும். இது மனது முழுவதுமாக சாப்பிட்ட உணர்வு ஏற்படும், மெதுவாகச் சாப்பிட்டு ஒழுங்காக மென்று சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவை முழுமையாக அனுபவிக்கிறீர்கள். வீக்கத்தைத் தடுக்கவும், குறைக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். உணவில் மட்டுமே கவனம் செலுத்தி உங்கள் உணவை உண்ணுங்கள். டிவி அல்லது உங்கள் தொலைப்பேசி அல்லது வேறு கவனச்சிதறல்களுடன் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் புரோபயாடிக்குகளைச் சேர்க்கவும்

தயிர், கேஃபிர், கிம்ச்சி மற்றும் கொம்புச்சா போன்ற உணவுகளில் உள்ள புரோபயாடிக்குகள் குடலுக்கு ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்குகின்றன மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. ஒரு ஆரோக்கியமான குடல் சிறந்த செரிமானத்திற்கு வழிவகுக்கிறது மற்றும் நிச்சயமாக வீக்கம் குறைய உதவுகிறது.

3gph7h6g
Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

நீங்கள் மலச்சிக்கலுடன் போராடுகிறீர்களானால், நீங்கள் அடிக்கடி வீங்கியிருப்பதை உணர வாய்ப்புள்ளது. போதுமான தண்ணீர் குடிக்கவும், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணவும். தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், அது வீக்கத்தை விலக்கி வைக்க உதவும்.

உங்கள் உணவில் உள்ள அனைத்து உணவுப் பகுதிகள் உட்பட, சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பது மற்றும் சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதைத் தவிர்ப்பது வீக்கத்தைத் தடுக்கலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------