முகப்பு »  நலவாழ்வு »  ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு மேலும் ஒரு காரணம்

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு மேலும் ஒரு காரணம்

55 வயதுக்கு மேல் உள்ள 6-ல் ஒரு பெண்ணுக்கும், 10% ஆண்களும் டிமென்டியாவால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உங்களுக்கு மேலும் ஒரு காரணம்

Low blood pressure reduces the risk of dementia

சிறப்பம்சங்கள்

  1. Lowering blood pressure would reduce a range of health complications
  2. Lower blood pressure may reduce dementia risk
  3. Healthy heart leads to a healthy brain

உலகில் முதன் முதலாக ஞாபக சக்தி குறைபாட்டை தடுக்கும் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் இதற்கு முன்னரும் இதற்கான மருந்துகள் இருந்திருக்கின்றன. அவற்றை நாம் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட நோய்க்கான மருந்தாக பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்பது தான் இது வரை நாம் அறியாத் தகவல்.

மக்கள் தொகை அதிகரிக் அதிகரிக்க, டிமென்டியாவும் அதிகரித்துவிட்டது. 55 வயதுக்கு மேல் உள்ள 6-ல் ஒரு பெண்ணுக்கும், 10% ஆண்களும் டிமென்டியாவால் பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஞாபக சக்தி தொடர்பான அல்சைமர் நோயினால் அமெரிக்காவில் ஆண்டு தோறும் 6 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதிக உயிரிழப்புகள் ஏற்படும் பட்டியலில் இதற்கு 6-வது இடம்.

ஞாபக சக்திக்கும், ரத்த அழுத்தத்துக்கும் இருக்கும் தொடர்பு பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. அதில், ரத்த அழுத்தம் கட்டுப்படுத்த கடுமையான சிகிச்சை பெற்றவர்களுக்கு டிமென்டியா வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது என்று தெரியவந்துள்ளது. ஹைப்பர் டென்ஷன் இருப்பவர்களுக்கு டெமென்டியா வர வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. எனவே முடிந்த வரையில் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் டிமென்டியாவில் இருந்து தப்பிக்கலாம்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------