முகப்பு »  நலவாழ்வு »  Acidity-ஆ..? உடல் எடையை குறைக்கணுமா..? இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..!

Acidity-ஆ..? உடல் எடையை குறைக்கணுமா..? இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..!

சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுவதையும், உங்கள் உணவில் இந்தப் பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.

Acidity-ஆ..? உடல் எடையை குறைக்கணுமா..? இந்தப் பழத்தை சாப்பிடுங்க போதும்..!

சீத்தாப்பழம் சாப்பிட்டால் ulcer மற்றும் acidity குணமாகும்.

சிறப்பம்சங்கள்

 1. சீத்தாப்பழம் கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
 2. சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை கட்டுப்படுத்தும்.
 3. சீத்தாப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

அமிலத்தன்மை (acidity) நீங்கவும், உடல் எடை குறைக்கவும் சீத்தாப்பழம் உதவும் என்று உங்களுக்குத் தெரியுமா.? உங்கள் டயட்டில் சேர்க்க சுவாரஸ்யமான யோசனைகளை அறிய இங்கே படியுங்கள். மருத்துவர்கள் சீத்தாப்பழத்தை ஏன் தவறாமல் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

சீத்தாப்பழத்தில் இருக்கும் நன்மைகள் :

ஆங்கிலத்தில் கஸ்டார்ட் ஆப்பிள் எனப்படும் சீத்தாப்பழம் வெப்பமண்டல அமெரிக்க நாடுகளிலும் மேற்கிந்திய தீவுகளிலும் சொந்த இடமாகக் கொண்டது. கஸ்டர்ட் ஆப்பிள் பொதுவாக இந்தியாவில் சீதாப்பால் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தப்பழம், பல்வேறு உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கும் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியமாக அறியப்படுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. சீத்தாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் கூறுவதையும், உங்கள் உணவில் இந்தப் பழத்தை ஏன் சேர்க்க வேண்டும் என்றும் அறிந்துகொள்ளுங்கள்.


சீத்தாப்பழத்தின் நன்மைகள் என ருஜுதா திவேகர் கூறும் பட்டியலில் :

 • முதல் முறை சாப்பிடும்போது, சீத்தாப்பழம் குடல் புண்களை குணப்படுத்தவும், அமிலத்தன்மையைத் தடுக்கவும் உதவும்.
 • பழத்திலிருக்கும் நுண்ணூட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை மென்மையாக்கி, நிறத்தைக் கூட்ட உதவும்.
 • கண் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
 • சீத்தாப்பழத்தில் உள்ள இரும்புச் சத்து ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தும். "சீத்தாப்பழத்தில் பயோஆக்டிவ் மூலக்கூறுகள் உள்ளன, அவை உடல் பருமனையும், நீரிழிவு மற்றும் புற்றுநோயையும் எதிர்க்கும் பண்புகள் உள்ளன" என்று ருஜுதா திவேகர் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சீத்தாப்பழத்தின் பிற ஆரோக்கிய நன்மைகள் :

1. சீத்தாப்பழம் நார்ச்சத்து நிறைந்தவை. நிலையான எடை இழப்பை அடைய நீங்கள் விரும்பினால், இது உங்களுக்கான பழம். இருப்பினும், கலோரிகளில் அடர்த்தியாக இருப்பதால், உணவில் ஒரு பகுதியாகவே எடுத்துக்கொள்வது அவசியம்.

2. சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கும்.

3. இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை தடுக்கும்.

4. பொட்டாசியம் நிறைந்த பழம் என்பதால், இது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு சிறந்தது. இதிலுள்ள பொட்டாசியம் சோடியத்தின் விளைவைத் தடுக்கிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சோடியத்தின் அளவு அதிகமானால் ஆபத்து.

5. உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு மற்றொரு முக்கியமான கனிமமான மெக்னீசியம் சீத்தாப்பழத்தில் உள்ளது.

உங்கள் உணவில் சீத்தாப்பழத்தை எவ்வாறு சேர்ப்பது..?

 • நீங்கள் இந்தப் பழத்தை "நசித்து, ருசித்து, அனுபவித்து, விரல்களை சப்புகொட்டி சாப்பிடுங்கள். இதை, 21-ஆம் நூற்றாண்டின் சூப்பர்ஃப்ரூட் என அறிவிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டாம்" என ருஜுதா கூறுகிறார். இந்த பழத்தை உங்கள் உணவில் சேர்க்க இன்னும் சில யோசனைகள் இதோ...
 • சீத்தாப்பழத்தை சாப்பிட எளிதான வழிகளில் ஒன்று, அதை பாதியாக வெட்டுவது. உங்கள் கைகளால் இரண்டாக பிளக்கவும் செய்யலாம். பின், ஒரு கரண்டியால் அதன் சதைப்பகுதிகளை எடுத்து சாப்பிடலாம்.
 • கூடுதல் சுவைக்காக சீத்த்காப்பழத்தில் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம்.
 • மேலும், பழத்தை நறுக்கி, மற்ற பழங்களுடன் salad செய்து சாப்பிடலாம்.
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com