முகப்பு »  நலவாழ்வு »  சருமம் தொய்வுறுதலைத் தடுப்பதற்கான 7 வழிகள்

சருமம் தொய்வுறுதலைத் தடுப்பதற்கான 7 வழிகள்

கொல்லாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற வேதிப்பொருட்களின் பற்றாக்குறையே சருமம தொய்வுறுவதற்கான காரணம்

சருமம் தொய்வுறுதலைத் தடுப்பதற்கான 7 வழிகள்

கொல்லாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற வேதிப்பொருட்களின் பற்றாக்குறையே சருமம தொய்வுறுவதற்கான காரணம். வயது ஆக ஆக தோல் தொய்வுறுதல் இயல்புதான் என்றாலும் சில எளிமையான வழிகளைக் கையாள்வதின் மூலம் அதைத் தடுக்கலாம். தோலுக்கு தரமான பொருட்களையே பயன்படுத்த வேண்டும். சருமத்திற்கு பாதிப்பு  தரும் புற ஊதாக்கதிர்களிடமிருந்து தப்பிக்க தரமான சன் ஸ்க்ரீன் லோஷனை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தை ஓரளவு பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

மேலும் சில வழிகள்:

1. ஈரப்பதம்: வைட்டமின் சி மற்றும் ஈ உள்ள, கற்றாழைச் சாறு கொண்ட மாய்ஸ்ச்சரைஸர்களைப் பயன்படுத்தி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் சரும பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.


2. தசைப்பயிற்சி : முகத்திலுள்ள தசைகளை அசைத்து முறையான பயிற்சி கொடுப்பதன் மூலம் சருமத்தை இளமையாக வைத்திருக்கலாம் என பிரபல உடற்பயிற்சியாளர் யாஸ்மின் கரச்சிவாலா குறிப்பிட்டு, பின் பல தசைப் பயிற்சிகளையும் பரிந்துரைக்கிறார்.

3. புகையை நிறுத்து : மற்றவர்களைக் காட்டிலும் புகை பிடிப்பவர்களுக்கே அதிகளவு சரும பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புகையை விடுத்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்.

32rd43b

4. இனிப்பு தவிர் : இனிப்பான எண்ணைப் பலகாரங்களும் சருமக் கோளாறுக்கு வித்திடுகிறது. எனவே அதையம்
 தவிர்த்திடல் வேண்டும்.

5. ஆரோக்கிய உணவு வேண்டும் : பதப்படுத்தப்பட்ட உணவு பெருமளவில் சருமத்தை பாதிக்கும். எனவே பழங்கள், காய்கறிகள், முட்டை,ஓமேகா-3  போன்ற சத்துக்கள் அடங்கிய உணவுகள் முதலானவற்றை உட்கொண்டு சருமத்தைப் பாதுகாக்கலாம்.

6. உடற்பயிற்சி : உடல் பருமனும் சருமக் கோளாறுக்கு ஒரு காரணம்தான். எனவே தினமும் முறையான உடற்பயிற்சி செய்து சருமத்தை பேணலாம்.

7. தரமான பொருட்கள் : சருமத்திற்கு எந்த பொருட்கள் பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்தக் கூடாது எனவும் நாம் அறிந்து வைத்திருத்தல் அவசியம். காலையும் மாலையும் தரமான பொருட்களை மட்டுமே தோலுக்கு பயன்படுத்தி பராமரித்தால் சருமத்தை தொய்விலிருந்து தப்பிக்கலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------