முகப்பு »  நலவாழ்வு »  மாதவிடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்கள்

மாதவிடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்கள்

பிரபல உடல்நல ஆலோசகர் ரூஜுத திவேகர் மாத விடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்களை நமக்குப் பரிந்துரைக்கிறார்

மாதவிடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்கள்

வலி மிகுந்த மாதவிடாய் மிகக் கொடுமையானது. தினசரி வேலைகளையே சில சமயம் பாதித்துவிடும். மாதவிடாயின்போது லேசான வலி சாதாரணமானதுதான். ஆனால் அது நம் அலுவல்களையும் அன்றாட வேலைகளையும் தவறவிடுவதற்குக் காரணமான ஒரு கடும் வலியாக இருந்தால் அது கவலைப்பட வேண்டிய விஷயமே. 20 வயதுக்குட்பட்டவர்கள், பரம்பரையாக வலியை சுமந்து வருபவர்கள் , அதிக உதிரப்போக்குடையவர்கள், 11 வயதிற்கு முன்னரே வயதிற்கு வந்தவர்கள், குழந்தைப் பேறு இல்லாதவர்கள் போன்றோர்களுக்கே இந்த அசாதாரண வயிற்று வலி வருகிறது.

கர்பப்பையிலுள்ள தசைச் சுருக்கமே இந்த வலிக்கு முக்கியக் காரணம். ப்ரோஸ்டாக்லான்டின் என்ற ஹார்மோனே இந்த தசைச் சுருக்கத்திற்கு வித்திடுகிறது. மாதவிடாயின் போது இந்த ஹார்மோன் வலு பெருகிறது.

பிரபல உடல்நல ஆலோசகர் ரூஜுத திவேகர் மாதவிடாய் வலியைப் போக்க சில எளிய வீட்டு மருத்துவங்களை நமக்குப் பரிந்துரைக்கிறார். வாழைப்பழம் ஒரு சிறந்த வலி நிவாரணி எனக் குறிப்பிடுகிறார்.


மாதவிடாய் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து உண்ண வேண்டும். இது சரியான இடைவெளியில் மாதவிடாய் வருபவர்களுக்கே சாத்தியம். ஏனென்றால அப்போதுதான் அந்த தேதி தெரிந்து முன் ஜாக்கிரதையாக இருக்க முடியும். இது ஓரளவு வலியைக் குறைக்கும்.

hodl82g8

அன்றாடம் உண்ணும் உணவில் பயிறு வகைகளை சேர்த்துக் கொள்ளுதலும் ஒரு வழியாகும். பருப்பு, பயிறு வகைகளை சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் வலியிலிருந்து தப்பிக்கலாம்.

வாழைப்பழம், இனிப்பு உருளைக்கிழங்கு முதலானவற்றை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறையாவது உட்கொண்டால் மாதவிடாய் வலியைக் குறைக்கலாம் என ருஜுதா கூறுகிறார்.

தினசரி உடற்பயிற்சி செய்தலும் இந்த வலிக்கான சிறந்த தீர்வாக அமையும் என்கிறார்.

மருந்தகங்களில் கிடைக்கும் கால்சியம் (கால்சியம் சிட்ரேட்) சத்துக்கள் நிறைந்த மருந்துகளை உட்கொண்டால் இந்த வலியிலிருந்து தப்பிக்கலாம்.

மேற்கண்டவைகளை முயற்சி செய்வதோடு வெந்நீர் வைத்து வயிற்றிற்கு ஒத்தடம் கொடுத்தல், வெந்நீர்க் குளியல், சிறு உடற்பயிற்சிகள் செய்தல் என சில விஷயங்களைக் கடைப்பிடித்தால் இவ்வலியிலிருந்து தப்பிக்கலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------