முகப்பு »  நலவாழ்வு »  Weight Loss: டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும் 3 பக்க விளைவுகள்!

Weight Loss: டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும் 3 பக்க விளைவுகள்!

தினமும் முட்டை, கொட்டைகள், விதைகள், சோயா புரதம் மற்றும் பால் பொருட்கள் சாப்பிடலாம்.

Weight Loss: டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்படும் 3 பக்க விளைவுகள்!

ஒவ்வொரு உணவிலும் முட்டை, கொட்டைகள், விதைகள், பாலாடைக்கட்டிகள் சேர்க்கலாம் 

சிறப்பம்சங்கள்

  1. Choose your protein sources wisely
  2. Eat sufficient amount of healthy carbs too
  3. High-protein diets may cause bad breath

நீங்கள் உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவரா? அப்படி என்றால் சில பக்கவிளைவுகளைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக உயர் புரதமிக்க டயட் உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது, தசை, எலும்புகள், இரத்த செல்களின் கட்டுமான தொகுதியாகப் பார்க்கப்படுகின்றன. எனவே, ஒரு நாளைக்கு 0.8 கிகி புரதம் நமது உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

முட்டை, பயறு, பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், டோஃபு, பால் மற்றும் பால் பொருட்கள், கோழி, கொட்டைகள் மற்றும் விதைகள் மற்றும் கடல் உணவுகள் ஆகியவை புரோட்டீன் நிறைந்து காணப்படுகின்றன.

1. இருப்பினும், அளவுக்கு அதிகமாக புரோட்டீன் சேரும் போது  சில கேடு விளைவுகளும் ஏற்படுகின்றன. பெரும்பாலோனார் உடல் எடையைக் குறைப்பதற்கு புரோட்டீன் உணவுகளையும், குறை கார்போ உணவுகளையு் எடுத்துக் கொள்கின்றனர். இது ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மற்ற சத்துகள் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். மலச்சிக்கல், மூச்சுத் திணறல், தலைவலி உள்ளிட்ட பக்க விளைவுகளும் ஏற்படும். 

2.எனவே, நீங்கள் அதிக புரத உணவை டயட்டில் இருக்கும் போது, உங்கள் புரத மூலங்களை சரியான விகிதத்தில் தேர்வுசெய்வதை உறுதிசெய்யவும். சிவப்பு இறைச்சி புரதத்தின் ஒரு நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக உட்கொள்வது இதயம், சிறுநீரகம் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

3.  அதிக புரத உணவுகள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரக செயல்பாட்டில் சில கேடுகளும் ஏற்படுத்தக் கூடும். புரத வளர்சிதை மாற்றத்திலிருந்து கழிவுப்பொருட்களை அகற்றும் போது அவர்களின் உடலில் சில சிக்கல் ஏற்படுகிறது.


9h66ej8g

அதிக புரோட்டீன் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்
Photo Credit: iStock

நீங்கள் புரத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள விரும்பினால், நல்ல தரமான உணவு ஆதாரங்களைத் தேர்வு செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் முட்டை, கொட்டைகள், விதைகள், சோயா புரதம் மற்றும் பால் பொருட்கள் சாப்பிடலாம். மேலும் முக்கியமானது கார்ப்ஸில் உள்ள தரம் ஆகும். பிரட் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளிலிருந்து பதப்படுத்தப்பட்ட கார்ப்ஸை அகற்றவும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

முழு தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை நிறைய சாப்பிடுங்கள். நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், புரத உணவுகளை எடுக்க விரும்பினால், அதற்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். ஒவ்வொரு உணவிலும் முட்டை, கொட்டைகள், விதைகள், பாலாடைக்கட்டிகள் சேர்க்கலாம் 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------