முகப்பு »  கண்கள் »  கண்கள் உலர்ந்து போவது என்றால் என்ன? இதனை சரி செய்ய உதவும் சிகிச்சை முறைகள்!

கண்கள் உலர்ந்து போவது என்றால் என்ன? இதனை சரி செய்ய உதவும் சிகிச்சை முறைகள்!

உலர் கண்கள் என்பது கண்கள் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னையாகும். இயல்பாக கண்கள் போதுமான ஈரப்பதத்தினை மீபோமியன் சுரப்பி மூலமாக உருவாக்குகின்றன. ஆனால், இந்த சுரப்பி செயலிழக்கும் போது உலர் கண் பிரச்னை உருவாகின்றது. கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணரும், கோயம்புத்தூரின் கண் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் டி.ராமமூர்த்தி, மிபோமியன் சுரப்பி செயலிழப்பு குறித்த சில நுண்ணறிவுகளுடன் வறண்ட கண்ணைப் பாதிக்கும் காரணிகளைப் பற்றி பேசுகிறார்.

கண்கள் உலர்ந்து போவது என்றால் என்ன? இதனை சரி செய்ய உதவும் சிகிச்சை முறைகள்!

வறண்ட கண்:

கண்ணில் நீர் பசை குறைவாக இருந்தால் அதனால் உலர் கண்கள் ஏற்படுகிறது. இது பொதுவாக கண்ணின் மேல் பகுதியில் உருவாகி மூக்கு வழியாக வெளியேறுகிறது. இந்த கண்ணீர் குறைவாக கண்ணில் இருந்தால் அதையே நாம் உலர் கண் என்கிறோம்.

வறண்ட கண்களின் அறிகுறிகள்:


இந்த உலர் கண்களினால் கண்ணில் எரிச்சல், உறுத்தல், கண் பார்வையில் குறைபாடு போன்றவை ஏற்படலாம். இதனால் அதிக நேரம் படிக்கவோ அல்லது கணினி போன்றவை படன்படுத்துவோ முடியாமல் போகலாம்.

வறண்ட கண்களை பாதிக்கும் காரணிகள்:

தொடர்ந்து படிப்பதாலோ, கணினி போன்றவை பயன்டுத்துவதாலோ, காற்று நேரடியாக கண்களில் படுவதாலோ அல்லது கண்களை சரியால மூடி திறக்காமல் இருந்தாலோ உலர் கண் ஏற்படலாம்.

வறண்ட கண்களில் மீபோமியன் சுரப்பியின் பணி:

மீபோமியன் சுரப்பி என்பது கண்ணின் இமை ஓரத்தில் உள்ளது. இதனால் தான் கண்ணில் எண்ணெய் பசை ஏற்படுகிறது. இது கண்களின் உயவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த காரணத்தினால் தான் கண்ணில் ஈரப்பதம் காய்ந்து போகாமல் இருக்கிறது. மீபோமியன் சுரப்பிகள் சராசரியாக மேல் இமையில் முப்பதும், கீழ் இமையில் இருபதும் உள்ளது.

மீபோமியன் சுரப்பி செயலிழப்பு என்றால் என்ன?

இந்த மீபோமியன் சுரப்பி சீராக இயங்காததையே நாம் மீபோமியன் சுரப்பி செயலிழப்பு என்று கூறுகிறோம்.இதனால் கண்ணில் உள்ள எண்ணெய் பசை சீராக இல்லாமல், ஈரப்பதம் சீக்கிரம் காய்ந்து போவதனால் கண்ணில் சில வேறுபடுகள் ஏற்படுகிறது. இந்த மீபோமியன் சுரப்பி குறைபாடு என்பது சராசரியாக 85முதல் 90 சதவீதம் உலர் கண் குறைபாட்டில் உள்ளது

மீபோமியன் சுரப்பி செயலிழப்புக்கான சிகிக்சை:

மீபோமியன் சுரப்பி சீராக இயங்காவிட்டால் கண்ணிமைகளை சீராக மசாஜ் செய்யலாம், கண்களுக்கு சூடு ஒத்தடம் கொடுக்கலாம். இருந்தும் சரியாக இயங்கவில்லை என்றால் வெக்டர் தர்மல் பல்சேஷன் என்ற தனித்துவமான கருவு கொண்டு இதனை உகந்த முறையில் சரி செய்யலாம்


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

முடிவு:

கண்ணீர் அழுவதால் மட்டும் வருவதல்ல! கண்கள் சீராக இயங்க கண்ணீர் மிக முக்கியமான ஒன்று. கண்ணில் எந்த வித குறைபாடு இருந்தாலும் அதிக சில எளிய முறைகளை கொண்டு சரி செய்யலாம் அல்லது மசகு எண்ணெய்( Eye drops) போன்றவை கொண்டு சரி செய்யலாம். இல்லையென்றால் வெக்டர் தர்மல் பல்சேஷன் என்ற முறையினால் அதனை சரி செய்து கொள்ளலாம்

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

-------------------------------- விளம்பரம் -----------------------------------