முகப்பு »  நீரிழிவு »  Type 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல.! இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.!!

Type 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல.! இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.!!

Type 2 நீரிழிவு டயட் : Type 2 நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கும், மாற்றியமைப்பதற்கும் இரத்த சர்க்கரை கட்டுப்பாடு முக்கியமானது. கிளைசெமிக் குறியீட்டில் (glycemic index) குறைவாக உள்ள 5 சூப்பர்ஃபுட்களைப் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரையை சீராக்க முடியும், மேலும் எடை குறைக்கவும் உதவும்.

Type 2 நீரிழிவு எல்லம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல.! இந்த 5 Superfood இருக்குற வரைக்கும்.!!

Diet for diabetes : Type 2 நோயாளிகள் குறைந்த GI மற்றும் குறைந்த கார்ப் உணவுகளை உண்ண வேண்டும்

சிறப்பம்சங்கள்

  1. டைப் 2 நீரிழிவு இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது
  2. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் பயனளிக்கும்
  3. டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க வழக்கமான உடற்பயிற்சி முக்கியம்

Diabetes diet : டைப் 2 நீரிழிவு நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் நிர்வகிக்க முடியும். உடல் எடையை குறைத்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், சத்தான குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் (GI) உணவை உட்கொள்வது மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸைத் தவிர்ப்பது ஆகியவை உங்கள் இரத்த சர்க்கரையை முறைப்படுத்தவும், டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்கவும் மிகவும் பயனுள்ள குறிப்புகளாகும். குறைந்த கார்ப்ஸுடன் கூடிய குறைந்த GI உணவுகள் டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். ஒரு உணவின் GI என்பது அடிப்படையில் இரத்த சர்க்கரையை உயர்வதைப் பொருத்தது. குறைந்த GI உணவுகள்  என்பது 55 அல்லது அதற்கும் குறைவான மதிப்பெண்களைக் கொண்டவையாகும், அதேபோல் அதிக GI உணவுகள் என்பது 70 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைக் கொண்டுள்ளதாகும். இங்கு, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் GI சூப்பர்ஃபுட்களைப் பற்றி பார்க்கப்போகிறோம்.

டைப் 2 நீரிழிவு நோய்க்கான சூப்பர்ஃபுட்ஸ் : இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் எடை இழப்புக்கு இவற்றை உட்கொள்ள வேண்டும்


1. கொட்டைகள் மற்றும் விதைகள்- Nuts and seeds

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு புரதம் நிறைந்த கொட்டைகள் மற்றும் விதைகள் சிறந்த சூப்பர்ஃபுட் ஆகும். எடை இழப்புக்கான டயட்டிலும் அவற்றை சேர்க்கலாம். வால்நட் பருப்புகள் மற்றும் ஆளிவிதைகளில் நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை தவிர, வால்நட்டில் நிறைந்திருக்கும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (alpha-linolenic acid) கொழுப்பைக் குறைக்கும் என்பதால், இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. கார்ப்ஸுக்கு பதிலாக கொட்டைகள், விதைகள் மற்றும் பிற ஆரோக்கியமான கொழுப்புகளை  மாற்றாக பயன்படுத்துவதால் இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்.

l2r96ba8

Nuts, seeds and fruits have low GI and can be included in type 2 diabetes diet
Photo Credit: iStock

Also read: Can Vegan Diet Reverse Type 2 Diabetes? Know The Answer From Our Expert

2. பச்சை இலை காய்கறிகள்

கீரைகள், கேல் கீரை, ப்ரோக்கோலி, lettuce (கீரை வகை) போன்றவை நன்மை பயக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிறைந்தவை, அவை இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன, மேலும் எடை குறைப்புக்கு உதவுகின்றன. பச்சை இலை காய்கறிகளும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நல்லது. நீங்கள் டைப் 2 நீரிழிவு நோயை மாற்றியமைக்க விரும்பினால், பச்சை இலைகள் உங்கள் உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

3. முழு தானியங்கள்

நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்கள் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன, அவை கொழுப்பை வளர்சிதை மாற்றத்துக்கு செயல்படுத்தி, ஆரோக்கியமான செரிமானத்திற்கு உதவவும் உதவும். முழு தானிய வகைகளான பார்லி, பயறு, தினை மற்றும் ராகி ஆகியவற்றை டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடை இழப்புக்கான டயட்டில் சேர்க்கப்படலாம், ஏனெனில் அவை உங்களை விரைவாக திருப்திப்படுத்துகின்றன, மேலும் உங்களை அதிக நேரம் முழுமையாக வைத்திருக்கின்றன. இது உங்கள் ஒட்டுமொத்த கலோரி அளவைக் குறைக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

Also read: 5 Home Remedies For Diabetics That Always Work

4. மாவுச்சத்து இல்லாத காய்கறிகள்

கூனைப்பூ (Artichoke), அஸ்பாரகஸ், பேபி சோளம், மூங்கில் தளிர்கள், பீன்ஸ், ப்ரோக்கோலி, கத்திரிக்காய், வெள்ளரி, கேரட், காலிஃபிளவர், செலரி (celery), காளான்கள், முளை கட்டிய பயறுகள், தக்காளி மற்றும் டர்னிப்ஸ் ஆகியவை மாவுச்சத்து இல்லாத காய்கறிகளுக்கு சில எடுத்துக்காட்டுகளாகும். இந்த வகை காய்கறிகள் உங்கள் பசியைப் பூர்த்தி செய்வதிலும், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் ஆகியவற்றை உட்கொள்வதிலும் சிறந்தவையாகும். அவை கார்ப்ஸில் குறைவாகவும், GI 55-க்கும் குறைவாகவும் உள்ளன. அவை டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உணவுகளில் சேர்க்க சரியானவையாகும்.

5. சிட்ரஸ் பழங்கள் (Citrus)

ஆரஞ்சு மற்றும் பளிச்சுவை பழங்கள் (grapefruits) போன்ற சிட்ரஸ் பழங்கள் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சிட்ரஸ் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பயனடையலாம். நீங்கள் அவற்றை ஜூஸ் பிழியாமல் முழு பழமாக சாப்பிட வேண்டும். பழங்களை ஜூஸ் செய்வதால், நன்மை பயக்கும் நார்ச்சத்துக்கள் நீங்கிவிடும். சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவது ஆண்களுக்கான நீரிழிவு அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, அதேபோல் பழச்சாறு குடிப்பதால் நீரிழிவு ஆபத்து அதிகரிக்கும். சராசரி அளவிலான ஆரஞ்சு பழத்தில் GI மதிப்பெண் 40-ஆக உள்ளது.

இந்த சூப்பர்ஃபுட்களை உட்கொள்வதைத் தவிர, நீரிழிவு நோயாளிகள் நன்றாக தூங்க வேண்டும் மற்றும் மன அழுத்தத்தை குறைவாக வைத்திருக்க வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான, சீரான உணவுகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கும் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியமாகும்.

k4b4o4no

உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும்
Photo Credit: iStock

Also read: You Must Follow This Diet Plan If You Want To Reverse Type 2 Diabetes

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com