முகப்பு »  நீரிழிவு »  நீரிழிவு: இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவும் சில டிப்ஸ்

நீரிழிவு: இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவும் சில டிப்ஸ்

நல்ல ஃபிரஷான பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து, பிற ஊட்டச்சத்துகளும் அதிகம் காணப்படுகின்றன.

நீரிழிவு: இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவும் சில டிப்ஸ்

நீரிழிவு நோயில் இரண்டாவது வகைதான் சற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் இப்போது பலருக்கும் வரத்தொடங்கி விட்டது. இதனை நமது வாழ்க்கை முறையால் சரி செய்ய முடியும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், வாழ்க்கை முறை ஆகியவை சரியாக இருந்தாலே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியும். 

நீரிழிவு நோயில் இரண்டாவது வகை நோய்தான் சற்று அதிக ஆபத்தை ஏற்படுத்தும். இது உடலின் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும். கண்பார்வை, தமனிகள், சிறுநீரகங்கள், தோல், முடி வளர்ச்சி போன்றவற்றை பாதிக்கச் செய்யும். இந்த நீரிழிவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் டவிங்கிள் கன்சால் சில குறிப்புகளை வழங்குகிறார்


உணவு முறை:
முதலில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை அடையாளம் கண்டு அதிலிருந்து வெளியே வரவும். மேலும், ஒவ்வாமை உணவு, மன அழுத்தம், குறைவான தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவு போன்ற மோசமான காரணிகளைக் கவனித்து சரிசெய்து கொள்ளுங்கள். குறிப்பாக ரீஃபைன்டு உணவுக்குப் பதிலாக அன்ரீஃபைன்டு உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

1) சுத்திகரிக்கப்படாத மாவு (முழு தானிய மாவு) 
பொதுவாக சுத்திகரிக்கப்பட்ட உணவில்  நார்ச்சத்து இருக்காது. ஆனால், மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, முழு கோதுமை,  சுத்திகரிக்கப்பட்ட மாவாக (மைதா) மாற்றப்படும்போது, ​​25% புரதம், 90% நார்ச்சத்து மற்றும் கிட்டத்தட்ட 50% ஊட்டச்சத்துக்களை இழக்கிறது. எனவே, ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கத்துக்கு மாறுங்கள். ஜோவர் (சோளம்), பக்வீட் (குட்டு), அமராந்த் (ராஜீரா), பஜ்ரா (முத்து), ராகி (விரல் தினை) போன்ற முழுதானிய உணவுகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் உள்ளன.

2) இயற்கைப் பழங்கள், நாட்டுச் சர்க்கரை-
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையில் வெறும் இனிப்புச் சுவை மட்டுமே இருக்கும். அதுவே நாட்டுச் சர்க்கரையில் இனிப்புச் சுவையும், ஊட்டச்சத்துகளும் இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரைக்குப் பதிலாக, நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

மேலும், பழங்களில் இனிப்பு சேர்த்தும் சாப்பிடலாம். நல்ல ஃபிரஷான பழங்களில் நார்ச்சத்து, நீர் சத்து, பிற ஊட்டச்சத்துகளும் அதிகம் காணப்படுகின்றன.

சில நேரங்களில் சந்தைகளில் நீரிழிவுக்கு ஏற்ற உணவு என்று பாக்கெட் உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அது ஆரோக்கியமானதா என்று பார்த்துவிட்டுச் சாப்பிட வேண்டும். பாக்கெட் உணவுகளில் பொதுவாக ஊட்டச்சத்து விவரங்கள் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கவனமாக படிக்க வேண்டும். அதில் சுக்ரோஸ், மால்டோஸ் போன்ற OSEd உடன் முடிவடையும் நியூட்ரிஷன் இருந்தால் தவிர்க்க வேண்டும். 

3) சுத்தகரிக்கப்பட்ட அயோடின் உப்புக்குப் பதிலாக, சாதாரண கல் உப்பு சேர்க்கலாம். 

4) நெய் சேர்ப்பவராக இருந்தால், டப்பாவில் அடைத்து பளபளப்பாக விற்கப்படும் ரீபைன்டு நெய் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால், ஒரிஜனல் பசுநெய் சேர்க்கலாம்.


j5buk958

Diabetes: Choose a healthy diet to manage diabetes effectively
Photo Credit: iStock

5) ஓய்வும் உடற்பயிற்சியும்


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

உணவு முறைகளைப் போல் நல்ல ஓய்வும் உடற்பயிற்சியும் உடலுக்குத் தேவை. உடற்பயிற்சி, தியானம் போன்றவை உடலையும், மனதையும் பக்குவமாக்கும். இவ்வாறு உங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றினாலே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கலாம்.

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------