முகப்பு »  நீரிழிவு »  செயற்கை இனிப்பு பொருட்கள் உடலுக்கு நல்லதா? - உண்மை இதுதான்

செயற்கை இனிப்பு பொருட்கள் உடலுக்கு நல்லதா? - உண்மை இதுதான்

சர்க்கரை உட்கொண்ட பிறகு அல்லது செயற்கை இனிப்புகள் உட்கொண்ட பிறகு உடலில் ஏற்படும் வேதியல் மாற்றங்களின் அளவுகள் கணிக்கப்பட்டுள்ளது

செயற்கை இனிப்பு பொருட்கள் உடலுக்கு நல்லதா? - உண்மை இதுதான்

Artificial sweeteners are not as healthy as you may think

சிறப்பம்சங்கள்

  1. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு, செயற்கை இனிப்புகள் மாற்றாக அமையலாம்
  2. சர்க்கரையின் மாற்றுகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மாற்றம் விளைவிக்கலாம்
  3. சர்க்கரை, செயற்கை இனிப்புகள் உடல் பருமன் போன்ற பாதிப்புகள் ஏற்படும்

சர்க்கரை போன்ற இனிப்புகளைத் தவிர்த்து நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கும், உடல் எடையை குறைப்பதற்கும், செயற்கை இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது. ஆனால், சமீபத்தில் நடைப்பெற்ற ஆய்வுகளில் சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப்படும் செயற்கை இனிப்புகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மாற்றம் விளைவிக்கும் என்ற தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இந்த ஆய்வில், சர்க்கரை உட்கொண்ட பிறகு அல்லது செயற்கை இனிப்புகள் உட்கொண்ட பிறகு உடலில் ஏற்படும் வேதியல் மாற்றங்களின் அளவுகள் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்களையும் ஆய்வாளர்கள் கூர்ந்து கணக்கிட்டுள்ளனர். இந்த ஆய்வு எலிகளிலும், உயிரணுக்களிலும் சோதிக்கப்பட்டுள்ளது.

“கலோரிகள் அற்ற செயற்கை இனிப்புகளை நாம் தினசரி பயன்படுத்திய போதும், உடல் பருமனிலும், சர்க்கரை அளவிலும் ஏற்றம் இருப்பதை ஆய்வின் முலம் கண்டறிய முடிந்தது” என்றார் முன்னனி ஆய்வாளர் ப்ரயன் ஹோப்மான். “எங்கள் ஆய்வில், சர்க்கரை மற்றும் செயற்கை இனிப்புகள் ஆகிய இரண்டும் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதைப் பார்க்க முடிந்தது. ஆனால், இரண்டும் வெவ்வேறு வழிமுறைகளில் வேலை செய்துள்ளதையும் ஆய்வின் மூலம் கண்டறிய முடிந்தது”, என்றார்.

சர்க்கரை அல்லது செயற்கை இனிப்புகளில் எது மிகவும் கொடியது?


இந்தக் கேள்விகான பதிலை கடந்த ஆய்வுகளில் இருந்து உறுதியாக சொல்ல முடியவில்லை எனவும், மேலும் ஆய்வுகள் நடைபெற வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் கூறினர்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com