முகப்பு »  குழந்தை பராமரிப்பு »  நோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை !

நோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை !

குளிர்காற்றை சுவாசிப்பதால் சளி, இருமல், அலர்ஜி, மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். 

நோய்களை தடுக்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை !

ஆரோக்கியமான உணவுகளையே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.


பொதுவாக குளிர்காலம் சில நோய்களோடே நம்மை நெருங்குகிறது. வறண்ட சருமம், மூட்டு வலி, சளி, இருமல் மற்றும் சுவாச பிரச்சனை ஆகியவற்றை கொண்டுவருகிறது. காற்றில் கிருமிகளின் ஆக்கிரமிப்பு அதிகம் இருக்கும் என்பதான் அதிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமானது. குளிர்காற்றை சுவாசிப்பதால் சளி, இருமல், அலர்ஜி, மூக்கடைப்பு மற்றும் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரும் இந்த விதிவிலக்கு அல்ல.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பெரிய நெல்லிக்காய், நெய், தேன் ஆகியவை சேர்த்து செய்யப்படும் லேகியமான சியாவன்பிராஷ் சாப்பிடலாம். இது சளி, இருமல், வாயுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். மேலும் உடலுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.


பெரிய நெல்லிக்காய் மற்றும் முப்பது வகையான இயற்கை மூலிகை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சியாவன்பிராஷில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் இந்த லேகியத்தை வெதுவெதுப்பான பால் மற்றும் வெந்நீருடன் கால் பங்கு சாப்பிடலாம். 6 முதல் 11 வயது குழந்தைகள் அரை தேக்கரண்டி சாப்பிடலாம். 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஒரு தேக்கரண்டி சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடல் உபாதைகளில் இருந்து தப்பிக்கலாம்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------