முகப்பு »  புற்றுநோய் »  புற்றுநோயை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா...?

புற்றுநோயை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா...?

World Cancer Day 2019: 2018 ல் புற்றுநோயால் உலகமெங்கும் 9.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்தற்கு காரணம் சுற்றுச் சூழல் மாறுபாடு, காற்று மாசு, வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும்.

புற்றுநோயை அதிகரிக்கும் உணவுகள் என்னென்ன தெரியுமா...?

World Cancer Day 2019: புகையிலை, ஆல்கஹால் பயன்பாடு புற்றுநோயை அதிகரிக்கும்.

சிறப்பம்சங்கள்

  1. பிப்ரவரி 4-ம்தேதி உலக புற்றுநோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  2. உள்ளூரில் விளைந்த புத்தம் புதிய காய்கறிகளை பயன்படுத்துங்கள்
  3. செயற்கையான இனிப்புகளை பயன்படுத்தாதீர்கள்

 இன்று சர்வதேச உலக புற்றுநோய் தினம். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 -ம் நாள் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடைமுறைகள், மருத்துவ முறைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தவே இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து செயல்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு ‘நானும் என் மனஉறுதியும்' என்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. 2018 ல் புற்றுநோயால் உலகமெங்கும் 9.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகரித்தற்கு காரணம் சுற்றுச் சூழல் மாறுபாடு, காற்று மாசு, வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கங்களே காரணமாகும். 

புற்றுநோய் செல்களை ஊக்குவிக்கக் கூடிய அல்லது உருவாக்கும் பொருட்களை கார்சினோஜென்கள் (carcinogens) என்று அழைக்கின்றனர். கார்சினோஜென்ஸ் பலவிதமாக இருக்கிறது. அவை

உடலியல் கார்சினோஜென்ஸ் (புற ஊதா மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சுகள்)


உயிரியல் கார்சினோஜென்ஸ் (சில பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகள்)

ரசாயன கார்சினோஜென்ஸ் (தொழில்சாலைகளில் உருவாகும் சிந்தெடிக் பொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், உணவுத்தொழிலில் பயன்படுத்தப்படும் ராசாயனங்கள் )

மேலே உள்ளவை மட்டுமல்ல புற்றுநோயை அதிகரிக்கும் சில காரணிகள் உள்ளன.  

அதிகரிக்கும் வயது

மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை, ஊட்டச்சத்து குறைபாடு பழம் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளாதது. 

புகையிலை, ஆல்கஹால் பயன்பாடு 

நாள்பட்ட தொற்றுகள் 

அதிக எடையினால், மார்பகம், உணவுக் குழாய், கருப்பை பெருங்குடல் ஆகியவற்றில் புற்று நோய் உருவாகலாம். 

புற்றுநோயை அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள்

அதிக உப்பு கலந்த உணவுகள்

அன்றாடம் அதிக உப்பு கலந்த உணவுகளான பதப்படுத்தப்பட்ட கறிகள், உப்பிட்ட மீன்கள் ஆகிய வயிற்றுப் புற்றுநோயை உருவாக்கக் கூடியது. அன்றாடம் நம் உள்ளூரில் விளையும் புத்தம் புதிய காய்கறிகளை சாப்பிடுவதே நல்லது. 

பதப்படுத்தப்பட்ட & புகையூட்டப்பட்ட இறைச்சிகள்

ஹேம், பன்றி இறைச்சிகள், சாஸேஜ்கள், மற்றும் சலாமி ஆகியவை  பதப்படுத்தப்பட்ட உணவுகள் வயிறு மற்றும் குடலினை பாதிக்கும் அபாயம் உள்ளது. புகையூட்டப்பட்ட உணவுகள் அதிக வெப்ப நிலையில் சமைக்கப்படும்போது அதிலிருக்கும் நைட் ரேட்கள் அதிக ஆபத்தாக மாறுகின்றன. 

dgij9118

கரி அடுப்பில் க்ரீல் செய்யப்பட்ட உணவுகள்

சிவப்பு இறைச்சிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் அதிக வெப்பநிலையில் க்ரில் செய்யப்படும் பொழுது நம் டி.என்.ஏ வைபாதிக்கக்கூடிய ஹெட் ரோசைக்ளிக் அமிலங்கள், பாலி சைக்கிளிக் நறுமண ஹைட் ரோகார்பன்களை உற்பத்தி செய்கிறது. நடுத்தரமான சூட்டில் சமைத்து கறியை சிறு இடைவெளிகளில் புரட்டி வேக வைப்பது மிகவும் அவசியம். ப்ராய்லிங்க் முறையில் சமைப்பது பாதுகாப்பானது.

மைக்ரோவேவபிள் பாப்கார்ன்

 பாக்கெட் செய்யப்பட்ட பாப்கார்னில் பெர்ஃபுளோரா-ஒக்டானியா அமிலம் (perfluoro-octanoic acid) புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜென்னாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளங்கள் செயற்கை வெண்ணெய்யில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களுக்கு விஷமாக மாறுகிறது. 

ஹைட்ரஜனேற்றப்பட்ட கொழுப்புகள்:

செல்லுலார் சவ்வுகளின் வடிவத்தை மாற்றவும், அசாதாரண செல்களின் ஊக்கமளிக்கும் இவை கண்டிப்பாக தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஆரோக்கியமான கொழுப்புகளான, நெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய், நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றையே பயன்படுத்தலாம். 

குளிர்பானங்கள்

குளிர்பானங்களில் வண்ணத்திற்காக சேர்க்கப்படும் கலவை மற்றும் சர்க்கரை உடல்நலத்திற்கு கேடானது.  பழைய நிம்மு பாணி வகையான சோடாக்கள் சர்க்கரை சேர்க்கப்பட்டது அதனால் எந்தவொரு கெடுதலும் இல்லை. பதப்படுத்தப்பட்ட உணவில் அல்லது குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை தீங்கு விளைவிக்கக்கூடியது. 

பேக் செய்யப்பட்ட உணவுகள் 

பேக் செய்யப்பட்ட உணவுகளில் உயரளவில் ஃபிரக்டோஸ் கார்ன் சிரப் சேர்க்கப்பட்டிருக்கும். இது புற்று நோயை உருவாக்குகுவதில் மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பேக்கரிகளில் பயன்படுத்தப்படும் இனிப்பு வகைகள், பிஸ்கட்கள், பிரேக்ஃபாஸ்ட் சிரில்கள்,  எனர்ஜி பார்கள் ஆகியவற்றை குளிர்பானங்களோடு இவற்றையும் தவிர்த்து விடுவது நல்லது. 

செயற்கையான இனிப்புகள் 

சில கலோரிகளை தவிர்ப்பதற்காக செயற்கை இனிப்புக்கு மாறுவது நல்லதல்ல. ஆய்வக ஆராய்சிகளில் செயற்கை இனிப்புகள் மற்றும் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக் கூடியது என்று கூறியுள்ளது. கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்: கேனில் அடைக்கப்பட்ட உணவில் பிஸ்ஃபெனோல் ஏ (bisphenol A) என்ற கேன்சர் அபாயத்தை அதிகரிக்ககூடிய  உணவு இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. கேனில் அடைக்கப்பட்ட தக்காளி சாறு மிகவும் மோசமானவை அவற்றில் உள்ள அமிலத்தன்மை புற்றுநோய் செல்களை அதிகரிக்கக் கூடியது. 

c8seahrg

சூடான பொருட்களை உண்பது  

மிகவும் சூடான உணவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். இவை உணவுக்குழாய் புற்று நோயை உருவாக்கும். 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same. 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------