முகப்பு »  புற்றுநோய் »  மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது?

மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது?

புற்றுநோய் வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம்

மார்பகப் புற்றுநோயை எப்படி கண்டுப் பிடிப்பது?

பெண்களை அதிகம் பாதிக்கும் புற்றுநோய்களுள் மார்பகப் புற்றுநோய் மிக முக்கியமானது. இதை வராமல் தடுப்பதும், ஆரம்ப நிலையில் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சைகள் எடுத்துக் கொள்வதும் அவசியம். சுய பரிசோதனை மற்றும் மாமோகிராம் ஆகியவற்றால் இதனை ஆரம்ப நிலையிலேயே கண்டுப் பிடிக்க முடியும். இதைப்பற்றிய விளக்கங்களைத் தருகிறார் அப்போலோ ஸ்பெஷாலிட்டி மற்றும் கேன்சர் மருத்துவமனையின், சீனியர் ஆன்காலஜி கன்சல்டன்ட் மருத்துவர் ரத்னா தேவி.

சுய பரிசோதனை

பெண்கள் தங்களது மார்பகங்களில் கவனம் கொள்ள வேண்டும். வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றத்தைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


அறிகுறிகள்

 • முலையில் மாற்றம் - கொஞ்சம் உட்புறமாக இருக்கும்.
 • முலையில் ரத்தக் கசிவு.
 • மார்பில் கட்டி தென்படுதல்.
 • மார்ப்பைச் சுற்றி அல்லது அதன் அடிப்பகுதியில் கனத்துப் போதல்.
 • ஸ்கின் டெக்ஸ்சரில் மாற்றம் மற்றும் துளைகள் பெரிதாகுதல்.
 • மார்பின் உருவம் மாறி, அளவு பெரிதாகுதல்.
 • மார்பில் குழி ஏற்படுதல்.
 • மார்பில் வீக்கம் மற்றும் சுருக்கம்.
 • தோல் செதில் செதிலாகவோ, சிவப்பு நிறத்திலோ, வீக்கமோ இருத்தல்.
 • இதில் ஏதாவது அறிகுறி தென்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

மருத்துவ ஆய்வு

1. மாமோகிராம்

மார்பகப் புற்று நோய்க்கு மிக முக்கிய டெஸ்ட் மாமோகிராம். மாமோகிராம் என்பது மார்பகத்தின் எக்ஸ்-ரே. இது 85% சென்ஸிட்டிவ், அதனால் 1 செ.மீ-க்கும் குறைவான கட்டிகளைக் கூட துல்லியமாகக் கண்டறிந்து விடும். 40-45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை இந்த பரிசோதனையை செய்துக் கொள்ள வேண்டும்.

2. அல்ட்ரா சவுண்ட்

மார்பக மாற்றங்களைத் தெரிந்துக் கொள்ள இது முக்கியமானது. மாமோகிராமில் கண்டறிய முடியாத கட்டிகளைக் கூட இதில் கண்டுப் பிடிக்கலாம். நீர்க்கட்டிகளுக்கும் புற்றுநோய் கட்டிகளுக்கும் இடையேயான வித்தியாசத்தை இந்த அல்ட்ரா சவுண்ட் துல்லியமாகக் காட்டும்.

3. எம்.ஆர்.ஐ ஸ்கேன்

புற்றுநோய் வருவதற்கு வாய்ப்பிருக்கும் சில பெண்களுக்கு மாமோகிராமுடன் இதுவும் சேர்த்து செய்யப் படும்.

4. பயாப்ஸி

மாமோகிராம் அல்லது மற்ற பரிசோதனைகளின் மூலம் கேன்சர் இருப்பது தெரியவந்தால், அதை உறுதி செய்ய இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

5. மற்ற பரிசோதனைகள்

மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன், எலும்பு ஸ்கேன் மற்றும் PET ஸ்கேன் ஆகியவைகள் பரிந்துரைக்கப் படும்.

தொடக்கத்தில் எப்படி கண்டறிவது?

சில பெண்களுக்கு தொடக்கத்தில் கண்டறிய முடியும். ஆனால் பெரும்பாலானோருக்கு எந்த அறிகுறியும் இருப்பதில்லை. அதனால் ஸ்கிரீனிங் டெஸ்டுகள் மூலம் கண்டறியப் படுகிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

 • 40-44 வயதுக்குட்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒருமுறை மாமோகிராம் செய்யலாம்.
 • 45-44 வயதுடைய பெண்கள் கண்டிப்பாக ஆண்டு தோறும் மாமோகிராம் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.
 • 55 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை இந்தப் பரிசோதனையை செய்துக் கொள்ளலாம்.

நவீன சிகிச்சைகள்

1. ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி

தொடக்க நிலை மார்பக புற்றுநோய்க்கு இந்த சர்ஜரி செய்யப்படும். கேன்சர் சர்ஜரி மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி இவை இரண்டும் சேர்ந்தது தான் இந்த ஆன்கோ பிளாஸ்டிக் சர்ஜரி. அறுவை சிகிச்சை செய்யப் பட்ட மார்பை இயற்கையான தோற்றத்திற்கு இதன் மூலம் கொண்டு வரலாம்.

2. ரேடியோ தெரபி

ரேடியேசன் மூலம் ட்யூமர் செல்லை நீக்க இது உதவுகிறது. இதில் 3 வார தொடர் அட்வான்ஸ்டு சிகிச்சை அளிக்கப் படுகிறது.

3. கீமோதெரபி

1 செ.மீ-க்கும் அதிகமான ட்யூமர் கட்டிகளைக் கொண்டவர்களுக்கு இந்த சிகிச்சையளிக்கப் படுகிறது. கீமோதெரபியின் காம்பினேஷனாக ட்ரான்ஸ்ட்ஸமாப் எம்டான்சினி என்ற மருந்தும் கொடுக்கப் படுகிறது. ஆனால் புற்றுநோய் செல்களோடு சேர்த்து இதில் நார்மல் செல்களும் கொல்லப் படுகின்றன.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------